விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் 2 மணிநேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Published on

விழுப்புரம்,

விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் 2 மணிநேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 2015-ல் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

கடலூர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதியானதாக சொல்லப்படுகிறது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தர்ராஜன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேவிகா, இடைத்தரகர் முருகன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரின் வீடுகளிலும் 2 மணிநேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நீடித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com