தூத்துக்குடி, விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தூத்துக்குடி, விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிக லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அதைபோல தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. எனினும், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த விவரம் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






