

சென்னை,
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அறப்போர் இயக்கத்தைச் சேரந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் 2022-ல் அளித்த புகாரின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் கணக்கில் ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த எ.வ.வேலு, தன்வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை எனவும், இது முழுவதும் தவெகவின் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை.3) நேரில் ஆஜராகுமாறு எ.வ.வேலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.