போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

பொன்னேரி அடுத்த சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
Published on

இந்த பேரணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சற்குணம் தலைமை தாங்கினார். சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்சுஜின் மற்றும் போலீசார், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இதில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com