போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக ஏற்படும் உடல் நல மற்றும் மனநல கோளாறுகள் குறித்தும், போதைப் பொருட்கள் பயன்பாடு காரணமாக சமுதாயத்தில் ஏற்படும் பொருளாதார பின்னடைவு குறித்தும், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் தனிமனித போதைப்பழக்கம் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com