போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

செங்கோட்டையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் சிலை முன்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்து விழிப்புணாவு பேரணி நடந்தது. தாசில்தார் முருகுசெல்வி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனா. பேரணி வாஞ்சிநாதன் சிலை முன்பு தொடங்கி தாலுகா அலுவலகம் வளாகம் சென்று நிறைவடைந்தது.

பேரணியில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணாவு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு கோஷங்கள் எழுப்பிச் சென்றனா.

நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் ராஜமணி, தேர்தல் தனித்துணை தாசில்தார் சிவன்பெருமாள், வருவாய் ஆய்வாளாகள் மாடசாமி, சரவணன், கிராம நிர்வாக அலுவலாகள் ஆயிஷாள், காளிச்செல்வி மற்றும் கிராம நிர்வாக உதவியாளாகள், பணியாளாகள் உள்பட பலா கலந்து கொண்டனா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com