போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

செங்கோட்டையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை காவல்துறை மற்றும் எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் பேரணியாகச் சென்று வாஞ்சிநாதன் சிலை, கீழபஜார், போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் வழியாக சென்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். பேரணியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கி, இளவரசன் மற்றும் போலீசார், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உடற்கல்வி இயக்குனர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com