தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
x

தூத்துக்குடியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. மதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தூய மரியன்னை கல்லூரி மற்றும் அமலோற்பவ மாதா மது ஒழிப்போர் சங்கம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) என்சிசி பிரிவு, அமலோற்பவ மாதா மது ஒழிப்போர் சங்கம் இணைந்து நடத்திய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. மதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி தூய மரியன்னை கல்லூரி வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய சாலைகள் வழியாக புனித பனிமய அன்னை ஆலய வளாகத்தில் நிறைவடைந்தது. போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் ஜெஸிஸி பெர்னாண்டோ நடத்தி வைத்து, மாணவர்கள் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என்று ஊக்கமளித்தார்.

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் சிறப்புரையாற்றி, மாணவர்களும் பொதுமக்களும் ஆரோக்கியமும் நற்பண்பும் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விழிப்புணர்வு பேரணியில் தூய மரியன்னை கல்லூரி என்சிசி, NCC LL, AICUF, NSS, YRC, RRC, Anti-Drug Forum போன்ற அமைப்பினர் கலந்து கொண்டனர். ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அலோசியஸ் பெண்கள் மணி நொடி பள்ளி, புனித சேவியர் பள்ளி என்சிசி பிரிவுகளும் பங்கேற்றனர்.

1 More update

Next Story