வளவனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

வளவனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வளவனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Published on

வளவனூர், 

வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக பாதுகாப்பு துறை, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர் பிரேமலதா, சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் முருகன் வரவேற்புரையாற்றினார். இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தியபடி முக்கிய வீதி வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ் நன்றி கூறினார்

X

Daily Thanthi
www.dailythanthi.com