ரேஷன் கடைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை

ரேஷன் கடைகளில் பொருட்கள் எடை குறைவு இன்றி வழங்கப்படுகிறதா? என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
ரேஷன் கடைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை
Published on

ரேஷன் கடைகளில் பொருட்கள் எடை குறைவு இன்றி வழங்கப்படுகிறதா? என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

ரேஷன் கடைகள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிபகழக சேமிப்புக் கிடங்கில் இருந்து உணவு பொருட்கள் லாரிகளில் ஏற்றி வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகம் செய்யப்படும் உணவுப் பொருட்களில் எடை குறைவு இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின்பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரையின்படி தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் தஞ்சையில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

உணவு பொருட்கள் அளவு

அப்போது நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்குகளில் இருந்து லாரிகளில் ஏற்றி வரப்பட்ட அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு இறக்கும் பொழுது எடை குறைவு இல்லாமல் குறிப்பிட்ட அளவு உள்ளதா? என சோதனை செய்தனர். அதைபோல் ரேஷன் கடைகளில் இருந்தும் உணவு பொருட்கள் நுகர்வோர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? எனவும் சோதனை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com