ரேஷன் கடைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
ரேஷன் கடைகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
Published on

பாவூர்சத்திரம்:

மதுரை மண்டல துணை சூப்பிரண்டு சினேகா பிரியா மற்றும் நெல்லை உட்கோட்ட துணை சூப்பிரண்டு முத்துக்குமார் அறிவுரையின்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கள ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு வழங்கும் பொது வினியோக பொருட்கள் சரியாக கிடைக்கிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் ரேஷன் பொருட்கள் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய வழிமுறைகளை கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com