தூத்துக்குடியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தூத்துக்குடியில் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட சுகாதார நலச் சங்க ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், கலெக்டர் தலைமையில் இன்று (31.5.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாவட்ட சுகாதார நலச் சங்கம் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிெமாழியினை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் யாழினி, வித்யா, துணை இயக்குநர்கள் சுந்தரலிங்கம் (காசநோய்), யமுனா (தொழுநோய்) மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






