குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணி: பங்கேற்க நடிகர் நடிகைகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

23-ந்தேதி நடைபெறும் குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள திமுக சார்பில் நடிகர் நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணி: பங்கேற்க நடிகர் நடிகைகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
Published on

சென்னை

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில், தி.மு.க சார்பில் டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் கண்டனப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் தி.மு.க கூட்டணியில் உள்ள 11 கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்கும் என்று நடிகரும், அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள நடிகர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்களும் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.கஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்

மக்களை மத ரீதியாக, இனப்பாகுபாட்டுடன் பார்க்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பாஜக அரசைக் கண்டித்து இந்தியாவே போராடி வருகிறது. கட்சி எல்லைகளைக் கடந்து சாதி, மதம், மாநிலப் பாகுபாடுகள் கடந்து இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இச்சட்டத்தை திரும்பப் பெற வைக்க முடியும். எனவே தாங்களும், தங்கள் அமைப்பும் இப்பேரணியிலும் அதைத் தொடர்ந்து நடக்க இருக்கும் போராட்டங்களிலும் பங்கெடுத்து தங்களது ஜனநாயகக் குரலை எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறேன் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com