சென்னையில் 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னையில் பணியாற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Published on

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சாம்வின்சென்ட். இவரின் வீடு கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பில் இருக்கிறது. இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், சாம்வின்சென்ட் வீட்டுக்கு திடீரென சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்தபோதே, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் சரவணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் சென்னையில் பணியாற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com