தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம்

அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் ஏ.பி.தமீம் அன்சாரி இன்று பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம்
Published on

சென்னை,

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி, ஏ.பி.தமீம் அன்சாரி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) தலைவராக (Chairman) நியமிக்கப்பட்டுள்ளார். இன்று 07.08.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 4.15 மணிக்கு, சென்னை TAMCO தலைவர் அறையில், அமைச்சர்கள் தலைமையிலும், IAS அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையிலும், புதிய தலைவர் பொறுப்பேற்க உள்ளார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com