

சென்னை
ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
புகார் அளித்தோர், புகாருக்கு உள்ளானோர் என அனைத்து தரப்பினரையும் விசாரித்து வரும் இந்த ஆணையத்தில் தினமும் பல புதிய தகவல்கள் பதியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் தாக்கல் செய்யக்கோரி நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனை இதனை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுத ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை வரும் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், அப்பலோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் திட்டமிட்டு உள்ளது
அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ராமமோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என ஆணையம் கூறி உள்ளது.
#JayalalithaaDeath | #InquiryCommission | #ApolloHospitals