ஆப்பக்கூடல் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஆப்பக்கூடல் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டா.
ஆப்பக்கூடல் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் கருல்வாடிபுதூர் பகுதியில் ஆப்பக்கூடல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் 600 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் சத்தியமங்கலத்தை சேர்ந்த முருகேசன் (வயது 22) என்பதும், அவர் அங்கு கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com