மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு: இ-சேவை மையங்களில் அலைமோதும் பெண்கள் கூட்டம்

மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்வதற்காக புதுக்கோட்டையில் உள்ள இ-சேவை மையங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு: இ-சேவை மையங்களில் அலைமோதும் பெண்கள் கூட்டம்
Published on

மகளிர் உரிமைத்தொகை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தும் பணம் கிடைக்காதவர்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொண்டு மேல்முறையீடு செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது. ம

லும் இதற்காக தாசில்தார் அலுவலகங்களில் உதவி மையங்களும், இ-சேவை மையங்களில் விண்ணப்பம் மேல்முறையீடும் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உதவி மையங்கள், இ-சேவை மையங்கள் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இ-சேவை மையம்

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மேல்முறையீட்டிற்கு விண்ணப்பித்து வருகின்றனர். காலை முதல் இந்த இ-சேவை மையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இத்திட்டத்தில் மேல்முறையீட்டிற்காக ஆர்.டி.ஓ.விடம் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை விவரம் பின்னர் மொத்தமாக தெரியவரும். தற்போது இணையதளத்தில் தனித்தனியாக ஒவ்வொரு ஆர்.டி.ஓ. வாரியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் முடிந்ததும் முழுமையாக விவரம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com