அனுமதிபெற விண்ணப்பிக்க கால அவகாசம்

கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதிபெற விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அனுமதிபெற விண்ணப்பிக்க கால அவகாசம்
Published on

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் கடந்த 1.1.2011-க்கு முன்னதாக கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் திட்டத்தின் கீழ் அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மீண்டும் 6 மாத காலம் கால நீட்டிப்பு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையால் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த திட்டத்தின் கீழ்விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tn.gov.in/tcp என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த கால நீட்டிப்பு மீண்டும் வழங்கப்படாது என்பதால் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com