எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு


எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு
x

மருத்துவ படிப்புகளுக்காக கால அவகாசம் இன்றே முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அனைத்து கல்லுரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் இந்தாண்டு ஜூன் 6 தேதியே தொடங்கிவிட்டது. வழக்கமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே விண்ணப்பம் தொடங்கும். இருப்பினும், மாணவர்களுக்கு விண்ணப்பிக்க போதுமான அவகாசம் வழங்கும் பொருட்டு முன்னரே தொடங்கியது.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 25-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்காக கால அவகாசம் இன்றே முடிவடைய இருந்த நிலையில் தற்போது விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story