

கடலூர்,
கடலூர் அருகே புதிதாக 4 ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவில், கடலுக்குள் எண்ணெய் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி ரூ.425 கோடி மதிப்பீட்டில் எண்ணெய் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்ததால் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வளம் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.