அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அக்னிபத் திட்டத்தில் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
Published on

இந்திய ராணுவ படையால் 2023-24-ம் ஆண்டிற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் திருமணமாகாத ஆண் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி இந்த மாதம் 15-ந்தேதி ஆகும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும். அக்னிபத் திட்டத்தின் கீழ் (பொது) பிரிவுக்கு 10-ம் வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 33 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் (டெக்னிக்கல்) பிரிவுக்கு 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கில பாடப்பிரிவு எடுத்து 50 சதவீத மதிப்பெண் மற்றும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதல் கட்ட பொது நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்படும்.

மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த போட்டி தேர்வுக்கு இந்திய ராணுவப்படை இணையதளத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com