அரசினர் தொழிற்பயிற்சியில் கல்வி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சியில் கல்வி பெற வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசினர் தொழிற்பயிற்சியில் கல்வி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on

திருவள்ளூர் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் வடகரை, தொலைபேசி எண்.044-29555659, mail: govtadwiti@gmail.com தொழிற்கல்வி பெறுவதற்காக வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிட்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் மெக்கானிக் வைக்கிள் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

. வெல்டர், வயர்மேன் பிரிவுகளில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற் பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை. விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 மட்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங், யு.பி.ஐ. மூலம் செலுத்த வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சி கட்டணம் இல்லை. பயிற்சியில் சேரும் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750 வீதம் வழங்கப்படும். புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் இலவச பஸ் பயண அட்டையும் மற்றும் அரசின் அனைத்து சலுகைகளுடன் தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விரிவான விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடுமாறு வடகரை ஐ.டி.ஐ (04429555659), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டி மையம், திருவள்ளூர் (044-29896032), மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் (044-27660250) ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகி பதிவு செய்திடலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com