மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
Published on

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வழியாக மனவளச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கப்பட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டடோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையானது மாதந்தோரும் ரூ.2 ஆயிரம் அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் அனுப்பட்டு வருகிறது.

தற்போது பயனாளிகளில் சுய விவரங்களான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் புகைப்படம்-1 மனவளர்ச்சி குன்றியோரயிருப்பின் பெற்றோர்ருடன் இணைந்த புகைப்படம்-1 தனித்துவம் வாய்ந்த, தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய சான்றுகளை அரசுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

தாங்கள் டிசம்பர்-2022 மாதம் வரை பராமரிப்பு உதவித்தொகை பெற்று, ஜனவரி-2023 மாதம் உதவித்தொகை பெறாதவர்கள் மட்டும், பராமரிப்பு உதவிதொகை தொடர்ந்து பெறவேண்டுமாயின் தாங்கள் உடனடியாக மேற்கானும் சான்றுகளை, இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காஞ்சீபுரம் (அலுவலக தொலைபேசி எண்:-044-29998040 என்ற அலுவலகத்தில் இந்த மாதம் 17-ந்தேதி (வெள்ளிகிழமை)-க்குள் சமர்பித்து தங்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையினை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com