புதிய கலைக் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்! - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகம்
Published on: 

சென்னை,

புதிய கலைக் கல்லூரிகள் தொடங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், முதுநிலை வணிக மேலாண்மை, கணினி பயன்பாடு பாடப்பிரிவுகள் மட்டுமே நடத்தும் மேலாண்மை நிறுவனங்கள், தற்போது செயல்படும் கல்லூரிக்கான புதிய இணைப்பு பாடங்கள், கூடுதல் பிரிவுகள் ஆகியவற்றுக்கான ஆன்லைன் பதிவு 2027-28-ம் கல்வியாண்டுக்கு வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைனில் பதிவு

www.unom.ac.in என்ற சென்னை பல்கலைக்கழக இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும். உரிய கட்டணத்துடன் அபராதம் இல்லாமல் அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அபராத கட்டணத்துடன் டிசம்பர் 10-ந்தேதிக்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com