

சென்னை,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்க தொகையும் அதனுடன், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
இதனடிப்படையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான "சமூக நல்லிணக்க ஊராட்சி" விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்தினையும், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31.07.2026க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன் படி இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social_award_app_26_27.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.