'அக்னிபாத்' திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

‘அக்னிபாத்’ திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'அக்னிபாத்' திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
Published on

'அக்னிபாத்' திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அக்னிபாத்

அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர்வாயு பிரிவில் (விமானப்படை) ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழியாக விண்ணப்பிக்க வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) கடைசிநாள். இதற்கான அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் agnipathvayu.cdac.in மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

அக்னி வீரர்களுக்கான இணைய வழி தேர்வு 13.10.2023 அன்று நடத்தப்படும். ஜூன் 27, 2003 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் டிசம்பர் 27, 2006 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உடல் தகுதி

உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, உடல் தகுதிதேர்வு நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். ஆக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே 4 ஆண்டுகள் பணிமுடிந்த பிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விண்ணப்பம் செய்து தேர்வில் கலந்துக்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com