ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல 24-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

ஹஜ் தன்னார்வ தொண்டர்களை செல்ல இணையதளம் வாயிலாக விண்ணப்பம் சமர்பிக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல 24-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

தமிழகம் மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் சவுதி அரேபியாவுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு (2020) மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கையை www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது.

ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதி உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தங்களின் துறை தலைவர் மூலம் உரிய வழியில் அனைத்து ஆவண நகல்களுடன் செயலர் மற்றும் செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ரோஸி டவர், மூன்றாம் தளம், எண்.13, மகாத்மா காந்தி சாலை, சென்னை-34 என்ற முகவரிக்கு 24-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேற்கண்ட தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com