டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
Published on

டாக்டர் அம்பேத்கர் பெயரில் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படுகிறது. பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு, வாழ்க்கை தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம். 2023-ம் ஆண்டிற்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், 8 கிராம் தங்க பதக்கமும், இதர செலவினங்களுக்கு ரூ.65 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

எனவே 2023-24-ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தகுதியான பட்டியலினத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதற்கான விண்ணப்பத்தை கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com