மணிமேகலை விருதுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்

மணிமேகலை விருதுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
மணிமேகலை விருதுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
Published on

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றை சேர்ந்தவர்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறுவதற்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனைத்து வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்கள், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நகர்ப்புற பகுதியில் உள்ளவர்கள் நகராட்சி, பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களிடமும், ஊரகப் பகுதியில் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாண்மை அலுவலக மேலாளர்களிடமும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com