தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறியுள்ளா.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்
Published on

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும், நடப்பு கல்வி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலம், அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள 23 இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட தகுதிபெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்கண்ட ஆசிரியர்களுக்கு மாதஊதியமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரமும் என்ற விகிதங்களில் கல்வி ஆண்டு முடியும் வரை அல்லது காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களை கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஆசிரியர்கள் காலிப்பணியிடத்திற்கு தகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 10-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com