ஹஜ் பயணம்: விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்

விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தவுடன் 30.7.2026 அன்று காலை 11.00 மணிக்கு கணிணி வழி குலுக்கல் தேர்வு நடைபெறும்.
ஹஜ் பயணம்
Published on

சென்னை,

இந்த ஆண்டு (ஹஜ் 2027, ஹிஜிரி 1448) ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 24.7.2026 என்று ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மும்பை இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் இந்த ஆண்டு (ஹஜ் 2027, ஹிஜிரி 1448) ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 24.7.2026, இரவு 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என மும்பை இந்திய ஹஜ் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குலுக்கல் தேர்வு

விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தவுடன் 30.7.2026 அன்று காலை 11.00 மணிக்கு கணிணி வழி குலுக்கல் தேர்வு நடைபெறும். இத்தேர்வு முறை https://www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் நேரலை (Livestream) செய்யப்படும் என்றும்,

குறுஞ்செய்தி

இதன் மூலம் தற்காலிகமாக தேர்வு பெற்றவர்கள் (Provisionally selected pilgrims) மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியல் இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் வெளியிடப்படுவதுடன், குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தெரிவிக்கப்படும் என்றும்,

முதல் தவணை

தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதப்பயணிகள் ஒவ்வொருவரும் முதல் தவணையாக ரூ. 1,52,300/-ஐ 10.8.2026-க்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com