இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் - நெல்லை கலெக்டர்

நெல்லை மாவட்டத்தில் இளைஞர்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம் - நெல்லை கலெக்டர்
Published on

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. படித்த இளைஞர்கள், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மூலம் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது.

எனவே இ-சேவை மையம் தொடங்க விரும்புவோர் விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி கடைசி நாள் ஆகும். இ-சேவை வலைத்தளத்தில் (www.tnesevai.tn.gov.in/ www.tnega.tn.gov.in) இருந்து இணையவழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் வகையில், இ-சேவை மையங்களை தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தவர்களுக்கு பயனர் எண், கடவுச்சொல் ஆகியவை விண்ணப்பத்தில் கொடுத்திருக்கும் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com