அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை

அரசு கலை அறிவியல் கல்லுரிகளில் சேர இன்று முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்றுமுன் தினம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லுரிகளில் சேர இன்று முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பிபிஏ,பிசிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 7 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com