அரசு பள்ளிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தொகுப்பூதிய முறைகளை கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.
அரசு பள்ளிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2 ஆயிரத்து 831 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் செயல்பட்டு வந்தன. இவற்றுக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், இவ்வகுப்புகளை மூட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இவ்வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் வேலைக்கு காத்திருக்கும் போது, தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன்? குறைந்த சம்பளத்தில் ஆசிரியர் நியமனம் அவர்களது எதிர்காலத்தை மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும். எனவே, தற்காலிக, தொகுப்பூதிய முறைகளைக் கைவிட்டு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com