அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு தேர்வு அடிப்படையில் மட்டும்தான் பணி நியமனம் - தெற்கு ரெயில்வே தகவல்

அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு தேர்வு அடிப்படையில் மட்டும்தான் பணி நியமனம் என்று தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு தேர்வு அடிப்படையில் மட்டும்தான் பணி நியமனம் - தெற்கு ரெயில்வே தகவல்
Published on

சென்னை,

இந்தியன் ரெயில்வேயில் பொன்மலை, பெரம்பூர் ரெயில்வே தொழிற்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ரெயில்வே தொழிற்சாலைகளில் கல்வித்தகுதி அடிப்படையில் தொழிற்திறனை மேம்படுத்தும் வகையில் அப்ரண்டிஸ் (பழகுனர்) பயிற்சி வழங்கப்படுகிறது. அப்ரண்டிஸ் சட்டத்துக்கு உட்பட்டு ரெயில்வே தொழிற்சாலைகளில், அப்பகுதிகளில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு பல்வேறு வகைகளில் அப்ரண்டிஸ் பயிற்சி கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என இந்தியன் ரெயில்வே ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

2017-ம் ஆண்டுக்கு பிறகு பொது மேலாளரின் இந்த அதிகாரம் கைவிடப்பட்டதால், ரெயில்வே தேர்வு இன்றி பணியமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனாலும், பயிற்சி முடித்தவர்கள், பொதுமேலாளரின் அந்த அதிகாரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், தேர்வு இல்லாமல், அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு ரெயில்வேயில் பணி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

ரெயில்வே பணியை பொறுத்தவரை தேர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படுகிறது. எனவே அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும். மேலும், அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு 1-ம் மட்ட பணியிட தேர்வில் 20 சதவீதம் அளவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அந்தவகையில் பயிற்சி முடித்தவர்கள், தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானதாகும். இதையடுத்து அவர்களை மருத்துவ தரத்துக்குட்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com