

சென்னை,
காவிரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வக்கீல்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்குகளில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, சேகர் நாப்டே, வி.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.இளங்கோ, வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.