தமிழ்நாடு முழுவதும் உள்ள 214 கோவில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம்

விண்ணப்பங்கள் இணையவழியில் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 214 கோவில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம்
Published on

சென்னை,

ஜூலை 22 வரை விண்ணப்பிக்க அவகாசம்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சட்டப்பிரிவு 46 (3)ன் கீழ் பிரசுரிக்கப்பட்ட 214 கோவில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து அடுத்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறங்காவலர் நியமன அறிவிப்பு, அறங்காவலர் நியமனம் செய்யப்பட உள்ள கோவில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதள முகவரியான www.hrce.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இணையவழியில் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைன், தபால் மூலம் விண்ணப்பிக்க வசதி

படிவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவே நியமன அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com