3 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதி நியமனம்: கொலிஜியம் பரிந்துரை


3 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதி நியமனம்: கொலிஜியம் பரிந்துரை
x

மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எம்.சுந்தரை நியமிக்க த்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை அனுப்பியது

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக 2-வது மூத்த நீதிபதியாக இருப்பவர் எம்.சுந்தர். இவரை மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.தற்போது மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பவர் வருகிற 14-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அதையடுத்து அந்த பதவிக்கு நீதிபதி எம்.சுந்தர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.சுந்தர், 1966-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி சென்னையில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் படித்து, 1989-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். சென்னை ஐகோர்ட்டில் சிவில் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவர் ஆஜராகி வந்தார்.

இந்தநிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி நிரந்தர நீதிபதியாக பதவி ஏற்றார். தற்போது மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதேபோல, பீகார் மாநிலம் பாட்னா ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் பவன்குமார் பஜன்திரியை அதே நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சவுமியா சென்-ஐ, மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

1 More update

Next Story