அறங்காவலர் குழு தலைவராக டி.சந்திரசேகரன் நியமனம்

திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக டி.சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுளளார்.
அறங்காவலர் குழு தலைவராக டி.சந்திரசேகரன் நியமனம்
Published on

திருப்பத்தூர் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன் உள்ளிட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு முன்பு கே.எஸ்.அன்பழகன் இறந்து விட்டதை தொடர்ந்து அந்தப் பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில் திருப்பத்தூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், முன்னாள் தி.மு.க. நகர இளைஞர் அணி அமைப்பாளருமான டி.சந்திரசேகரனை மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து அவர் திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் 288 கோவில்கள் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உடனடியாக அறநிலை துறை சார்பில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

திருப்பத்தூரில் கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவும், அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் விரைவில் வேலூர் மாவட்டத்தில் இருந்து விரைவில் அறநிலையத்துறையை பிரித்து திருப்பத்தூருக்கு உதவி ஆணையாளர் மற்றும் அறநிலையத்துறை அலுவலகம் செயல்பட உள்ளது. திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலை புதுப்பிக்கும் பணி, பக்தர்கள் நன்கொடையால் நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும்.

மேலும் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு வழங்கப்படும் நிதிகளை பெற்று பணிகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், பி.என்.எஸ்.சரவணன், டி.குணசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com