கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் - உயர் கல்வித்துறை உத்தரவு

கல்லூரி கல்வி இயக்குனராக திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதாவை முழு கூடுதல் பொறுப்பாக நியமித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் - உயர் கல்வித்துறை உத்தரவு
Published on

சென்னை,

உயர் கல்வித்துறையின் கீழ் வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாக செயல்பாடுகள் உள்பட அனைத்தையும் கல்லூரி கல்வி இயக்ககம் கண்காணித்து வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த பூர்ணசந்திரன், கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருடைய நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி உயர் கல்வித்துறை பூர்ணசந்திரன் நியமனத்தை நிறுத்தி வைத்தது.

இதையடுத்து, ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராக இருந்த ஈஸ்வர மூர்த்தியை, முழு கூடுதல் பொறுப்பு கல்லூரி கல்வி இயக்குனராக நியமித்து, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. அதன்படி, அவர் அந்த பொறுப்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குனராக இருந்து வந்த ஈஸ்வரமூர்த்திக்கு பதிலாக திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதாவை முழு கூடுதல் பொறுப்பாக நியமித்து உயர்கல்வித்துறை நேற்று உத்தரவிட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com