புதிய தலைமைச் செயலாளர் நியமனம்: சீமான் வரவேற்பு

தமிழர் ஒருவரை தலைமைச்செயலாளராக அரசு நியமித்துள்ளதற்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதிய தலைமைச் செயலாளர் நியமனம்: சீமான் வரவேற்பு
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக அனுபவமும், திறமையும் வாய்ந்த மதிப்பிற்குரிய முருகானந்தம் இ.ஆ.ப. நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முருகானந்தத்தின் உண்மையும். நேர்மையுமான, அர்ப்பணிப்பு மிகுந்த பணித்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இந்நியமனத்தைக் கருதுகிறேன்.

தமிழர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்களை உணர்வுப்பூர்வமாக அணுகி உரிய தீர்வினைக் காண, தமிழ்நாட்டின் அதியுயர் ஆட்சிமை பதவிகளில் மண்ணின் மொழியும், மக்களின் வலியும் புரிந்த மாட்சிமை பொருந்திய தமிழர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்கும் விதமான தற்போதைய நியமனம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தலைமைச்செயலாளராக முருகானந்தம் நியமனம் தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பாகும். தத்துவ அறிஞர் இறையன்புவுக்கு பிறகு, தமிழர் ஒருவரைத் தலைமைச்செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாட்டு அரசிற்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள்!"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com