750 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்


750 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்
x

சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

சென்னை,

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் சமீபத்தில் 621 காவல் சார்பு ஆய்வாளர்களும், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நாளை (3-ந் தேதி) காலை 10 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற இருக்கிறது. விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

1 More update

Next Story