உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கொளத்தூரில் தொடங்க உள்ள கபாலீஸ்வரர் அரசு கலை கல்லூரிக்கு உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கொளத்தூர் தொகுதியில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் 11 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த வாரம் போடப்பட்டன. தற்போது அதற்கான நேர்காணல் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக 11 உதவிபேராசியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பணி நியமனம் ஆணைகளை வழங்கினார்.

இதில் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, இளங்கலை வியாபார நிர்வாக துறை, கணித்துறை, வணிகவியல் துறை, கணினி அறிவியல் துறை, கணிப்பொறி பயன்பாட்டுத்துறை, மூலவர் மற்றும் உடற்கல்வித்துறை உள்ளிட்ட 11 நபர்களுக்கு துறை சார்ந்த பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com