தூத்துக்குடியில் 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்


தூத்துக்குடியில் 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கினார்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் இன்று முதல் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பேருக்கு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மேற்சொன்னபடி தேர்வு செய்யப்பட்ட 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு நேற்று மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேற்சொன்ன 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் இன்று (9.12.2025) முதல் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி. ஆறுமுகம் உடனிருந்தார்.

1 More update

Next Story