போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - துணைவேந்தர் வேல்ராஜ்

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - துணைவேந்தர் வேல்ராஜ்
Published on

சென்னை,

போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் செய்தியாளர் வேல்ராஜ் சந்திப்பில் கூறியதாவது:-

கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீதியரசர் வள்ளிநாயகம் இந்த விவகாரத்தில் ஏமாந்துள்ளார். விருது வழங்கும் நிகழ்ச்சி என அரங்கத்தை வாடகைக்கு கொடுத்துவிட்டோம். இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை தனியாருக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.

மோசடி கும்பலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. நவம்பரில் விருது வழங்கும் விழா என அனுமதி கேட்டனர். நாங்கள் வழங்கவில்லை. ஜனவரியில் ஓய்வு பெற்ற நீதிபதி பெயரில் பரிந்துரை கடிதம் வந்ததால் அனுமதி வழங்கினோம். பல்கலை. பெயரை தவறாக பயன்படுத்தி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது கண்டிக்கத்தக்கது.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். சட்ட பூர்வமாக இதை அணுகுவோம். போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி அரங்கை வாடகைக்கு விடுவதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவோம். தனியாருக்கு அரங்கு வாடகைக்கு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com