திறனாய்வுத் தேர்வு முடிவுகள் - டிசம்பர் 1 ஆம் தேதி வெளியீடு

மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திறனாய்வுத் தேர்வு முடிவுகள் - டிசம்பர் 1 ஆம் தேதி வெளியீடு
Published on

சென்னை,

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறன்களை கண்டறிந்து அவற்றை ஊக்குவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் திறனாய்வுத் தேர்வு கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைப்பெற்றது.

இதில் 1,27,673 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வெழுதியவர்களில் 1000 மாணவர்கள் (500 மாணவர், 500 மாணவியர்) தேர்ந்தெடுக்கப்பட்டு இளநிலைப் பட்டப்படிப்பு வரை மாதம் 1000 ரூபாய் என ஒரு கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும்.இத்தேர்வு முடிவுகள் டிசம்பர் 1 ஆம் தேதி தேதி காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com