அரக்கோணம்-சேலம் பயணிகள் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்

வளத்தூர், மேல்பட்டி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு சேலத்துக்கு பயணிகள் ரெயில் புறப்படுகிறது. மறுமார்க்கமாக, சேலத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்கிறது. இந்த ரெயில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வளத்தூர், மேல்பட்டி ஆகிய இரு ரெயில்நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று அரக்கோணம்-சேலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்-16087) நாளை (திங்கட்கிழமை) முதல் வேலூர் மாவட்டத்தில் உள்ள வளத்தூர், மேல்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் மறுமார்க்கமாக சேலம்-அரக்கோணம் பயணிகள் ரெயில் (வண்டி எண்-16088) வளத்தூர் ரெயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும்.
இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






