ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவிலில் 1-ந் தேதி தேரோட்டம்

ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர் சல்லும் பாதையில் நகராட்சி தலைவர், அதிகாரிகள், அறநிலைய துறையினர் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.
ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவிலில் 1-ந் தேதி தேரோட்டம்
Published on

ஆரணி

ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவில் தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேர் சல்லும் பாதையில் நகராட்சி தலைவர், அதிகாரிகள், அறநிலைய துறையினர் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.

கோட்டை கைலாயநாதர் கோவில்

ஆரணி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கைலாயநாதர் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும் இந்த கோவிலில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பெரிய மரத்தேர் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேரோட்டம் நடக்கும். அதன்படி கடந்த 2012 ஆம் ஆண்டு மே 1-ந் தேதி தேரோட்டம் நடந்தது. மாடவீதி வழியாக பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.

மணிக்கூண்டு அருகே சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததின் காரணமாக தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 5 நபர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் அமைக்க அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து தேர் உருவாக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்தன. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில் அப்போதைய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இந்த சேவூர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது தான் தேரின் முழு பணிகளும் முடிக்கப்பட்டது. இந்த நிலையில் சித்திர திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு மாட வீதியின் வழியாக தினமும் காலை, மாலை இருவேளையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இன்று (சனிக்கிழமை) இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

தேரோட்டம்

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனையொட்டி கோவில் செயல் அலுவலர் ம.சிவாஜி தலைமையில் நகராட்சி ஆணையாளர் டி.தமிழ்ச்செல்வி, நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி, தீயணைப்புத்துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் டி. ராஜ விஜய காமராஜ், பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தேர் செல்லும் பாதையை ஆய்வு செய்தனர்.

அப்போது தேர் செல்லும் பாதையில் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்களை அகற்றுவது, சாலை மேடு பள்ளமாக இருப்பதை சமன் செய்வது, மரக்கிளைகள் வளர்ந்து இருந்தால் அகற்ற வெட்டி அக்றுவது என இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com