அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

சென்னை,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜக துணை தலைவரும், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com